ரங்கூன் துப்பாக்கிசூடு- இந்திய தூதரகம் கவலை

ரங்கூன் துப்பாக்கிசூடு- இந்திய தூதரகம் கவலை
X

ரங்கூன் மற்றும் மியான்மரில் நடைபெற்ற துப்பாக்கிசூடு குறித்து இந்திய தூதரகம் தனது கவலையை வெளியிட்டுள்ளது .

ரங்கூன் மற்றும் மியான்மரின் பிற நகரங்களில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், இந்திய தூதரகம் கவலையடைந்துள்ளது. மேலும் அமைதி வழியில் பேச்சு வார்த்தை மூலம் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கேட்டுக் கொண்டனர்.

உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். அமைதிவழியில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளை தீர்க்குமாறு அனைவரையும் நாங்கள் வலியுறுத்துவோம் என்று மியான்மரிலுள்ள இந்திய தூதரகம் ட்வீட் செய்து உள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!