ஐநா.வில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை- இலங்கை எதிர்ப்பு
இறுதிப் போரில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாக ஐநா.வில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு இலங்கை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையில் அந்நாட்டு ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்து வந்த யுத்தம், 2009ம் ஆண்டு உச்சத்தை அடைந்தது. போரில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், பலர் காணாமல் போயுள்ளதாகவும் ஐநா மனித உரிமைகள் ஆணையர் மிச்செல் பச்லெட் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு இலங்கை எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், தீர்மானத்தைத் திரும்பப் பெறுமாறு இலங்கை கேட்டுக் கொண்டுள்ளது.
காணொலி காட்சி வாயிலாக நடந்த ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தில் கலந்து கொண்ட அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனே, 'இது அரசியல் சார்பு கொண்ட தீர்மானம், ஐநா இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். ஐ நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வின் போது இலங்கை சார்பாக பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu