தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த கனடியத் தமிழர் பேரவை

தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த  கனடியத் தமிழர் பேரவை
X

கனடாவின் ரொறொன்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய நிதி அளித்த தமிழக அரசுக்கு, நன்றி தெரிவித்து கனடியத் தமிழர் பேரவை வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது,

கனடாவின் ரொறொன்டோ பல்கலைக்கழகத்தில், தமிழ் இருக்கை ஒன்றை அமைப்பதற்காக ஒரு கோடி இந்திய ரூபாய்கள் நிதி அன்பளிப்பு வழங்குவதாக பிப்ரவரி 22 அன்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதற்காகத் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழ் மொழி, கலாச்சாரம், தொல்லியல் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் மற்றும் தமிழ்நாடு அரசில் அங்கம் வகிப்போர் உட்பட, அனைவருக்கும் கனடியத் தமிழர் பேரவை உள உவகையுடன் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்த நிதியுதவியை தமிழக அரசிடமிருந்து பெறுவதைச் சாத்தியப்படுத்துவதற்காக உழைத்த அனைவருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் கனடியத் தமிழர் பேரவை நன்றிக்களை தெரிவித்துக் கொள்கிறது. என அதில் குறிப்பிட்டிருந்தது.

Tags

Next Story