அத்துமீறி இலங்கைக்குள் நுழைந்த நான்கு பேர் கைது

அத்துமீறி இலங்கைக்குள் நுழைந்த நான்கு பேர் கைது
X

அத்துமீறி இலங்கைக்குள் நுழைந்த பிரான்ஸ் சொகுசுப்படகு பறிமுதல் செய்யப்பட்டு நால்வர் கைது செய்யப்பட்டனர்.

அத்துமீறி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்ததாக நான்கு பிரெஞ்சு நாட்டை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் பயணம் செய்த படகு மீட்கப்பட்டது.இந்த நான்கு பேரும் ஏழு நாட்களுக்கு முன்பு பிரான்சிலிருந்து புறப்பட்டதாகவும் படகில் எரிபொருள் தீர்ந்துவிட்டதை தொடர்ந்து, மிரிசஸ் மீன்பிடி துறைமுகத்தை நோக்கி கேப்டன் கப்பலை செலுத்தி வந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் மிரிசஸ் கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்ட அவர்கள், மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என காவல்படையினர் கூறியுள்ளனர்.

Tags

Next Story
ai devices in healthcare