சிறையிலிருந்து பயங்கரவாதி எப்படி தப்பித்தார் -மலாலா

சிறையிலிருந்து பயங்கரவாதி எப்படி தப்பித்தார் -மலாலா
X

சிறையிலிருந்து தலிபான் பயங்கரவாதி எப்படி தப்பித்தார் என மலாலா கேள்வி எழுப்பியுள்ளார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா (23), பெண் குழந்தைகளின் கல்விக்காக, பல முயற்சிகளை எடுத்து வருகிறார். 2012ம் ஆண்டில் தலிபான் பயங்கரவாதி இஸானுல்லா இஸான் நடத்திய தாக்குதலில், தலையில் குண்டு பாய்ந்து, மலாலா படுகாயமடைந்தார். சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார். இதை தொடர்ந்து மலாலா,பெண் குழந்தைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். இந்நிலையில், மலாலா மீது தாக்குதல் நடத்திய இஸான், சமீபத்தில், 'ட்விட்டர்' வாயிலாக, மலாலாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

இதை சுட்டிக்காட்டி, மலாலா ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது: என் மீதும், பல அப்பாவி மக்கள் மீதும் தாக்குதல் நடத்திய, தலிபான் பயங்கரவாத அமைப்பின் முன்னாள் செய்தித் தொடர்பாளரான இஸான், தற்போது சமூக ஊடகம் வாயிலாக, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவர் சிறையில் இருந்து எப்படி தப்பித்தார்? பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும், ராணுவமும் அதை தெளிவுபடுத்த வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Tags

Next Story
ai and future of education