இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 2 பேர் பலி

இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 2 பேர் பலி
X

இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் பெய்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கிய இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவின் நங்கன்ஜுக் மாவட்டத்தில் உள்ள செலாபுரோ கிராமத்தில் காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் பாதுகாப்பு வீரர்கள், காவல்துறை மற்றும் தன்னார்வலர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட மீட்புப் படையினர் பங்கேற்றுள்ளதாகத் தேசிய பேரிடர் தொடர்பாளர் ராதித்யா ஜதி தெரிவித்தார்.

மேலும், இதுதொடர்பாக அவர் கூறியது, ஞாயிற்றுக்கிழமை சுற்றியுள்ள மலைகளிலிருந்து மண் உருண்டதில் குறைந்தது எட்டு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. 21 பேர் மண்ணில் புதைந்தனர். மேலும் 14 பேர் காயமடைந்தனர். மண்ணில் புதைந்த இரண்டு பேரின் உடல்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளது. மற்றும் காயமடைந்த மூன்று பேர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர் என தெரிவித்தார்.

Tags

Next Story
ai future project