சீனாவில் பிபிசி செய்தி நிறுவனத்திற்கு தடை

சீனாவில் பிபிசி செய்தி நிறுவனத்திற்கு தடை
X

பிபிசி உலக செய்தி சேவைக்கு சீனா நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

கொரோனா வைரஸ் மற்றும் உய்கர் இன சிறுபான்மையினர் மீதான அடக்குமுறை தொடர்பான பிபிசி-யின் ஊடக ஒளிபரப்பு குறித்து சீனா விமர்சித்துள்ளது. இதனிடையே, இந்த தடை குறித்து சீனாவின் திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் வானொலி தொடர்பான நிர்வாகம், பிபிசி-இன் சீனா தொடர்புடைய சில தகவல்கள் சீன தேசிய நலன்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்ற தமது நாட்டு ஒலிபரப்பு வழிகாட்டுதல்களை மீறும் வகையில் உள்ளதாக தெரிவித்துள்ளது. எனவே சீனாவில் பிபிசி உலக செய்தி சேவைக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!