இந்தியாவுடனான ஒப்பந்தம்- ரத்து செய்த இலங்கை

இந்தியாவுடனான ஒப்பந்தம்- ரத்து செய்த இலங்கை
X

கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கன்டெய்னர் முனையத் திட்டம் அமைக்கும் இந்தியாவுடனான ஒப்பந்தத்தை இலங்கை ரத்து செய்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கன்டெய்னர் முனையம் அமைக்க இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் கடந்த 2019-ம் ஆண்டில் இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதற்கான ஏற்பாடுகளை இந்தியா, ஜப்பான் நாடுகள் செய்து வந்தன.ஆனால் திடீரென இந்த ஒப்பந்தத்தை இலங்கை ரத்து செய்துள்ளது. கொழும்பு துறைமுகத்தில் உள்ள 23 தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக இந்த ஒப்பந்தத்தை இலங்கை ரத்து செய்துள்ளதாகத் தெரிகிறது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்