உலக ஈரநிலங்கள் தினம்
உலக ஈரநிலங்கள் தினம், இத்தினத்தினைக் கொண்டாடுவதன் ஊடாக உலகளாவிய ரீதியில் மனித இனம் மற்றும் இவ்வுலகுக்கு இவ் ஈரநிலங்கள் எவ்வளவு மிக மிக முக்கியமான பெறுமதிமிக்க வளம் என்பது தொடர்பிலும் விழிப்புணர்வு கட்டியெழுப்பப்படுகின்றது. இவ் ஈரநிலங்கள் தினம் முதன் முதலில் 1997 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
பிப்ரவரி மாதம் 2 அன்று 1971 ஆம் ஆண்டில் ஈரான் நாட்டின் கரீபியன் கடற்பகுதியில் ராம்சர் என்னுமிடத்தில் ஈரநிலங்களைப் பாதுகாத்தல் சம்பந்தமாக ஒரு மாநாடு நடைபெற்றது. ஈரநிலங்களைப் பாதுகாப்பதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஈரநிலங்களைப் பாதுகாப்பதன் மூலம் பல்லுயிர் வளங்கள் மற்றும் கலாச்சாரம் பாதுகாக்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டே பிப்ரவரி 2 அன்று இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
எதிர்கால சந்ததிக்காக இயற்கையினை பாதுகாக்க நாம் அனைவரும் சமூக உணர்வுடன் செயற்படுவோம். எம்மாலான முயற்சிகளை செய்வோம்.
-மைக்கேல்ராஜ்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu