குவைத்திற்கு கொரோனா தடுப்பூசிகள்- இந்தியா வழங்கல்

குவைத்திற்கு கொரோனா தடுப்பூசிகள்- இந்தியா வழங்கல்
X

குவைத் நாட்டிற்கு கொரோனா தடுப்பூசிகளை இந்தியா வழங்கியது.

கொரோனா தடுப்பூசிகளை பல நாடுகளுக்கு இந்தியா அனுப்பி வைத்து வருகிறது. அந்த வகையில் தனி விமானம் மூலம் குவைத் நாட்டிற்கு கொரோனா தடுப்பூசிகளை இந்தியா வழங்கியது. இந்தியா தயாரித்த தடுப்பூசிகள் குவைத்திற்கு திங்கட்கிழமை அதிகாலை வந்து சேர்ந்தன என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார்.

இதனிடையே, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் பூரீவத்சவா, ஓமன், நிகாரகுவா, பசிபிக் தீவு நாடுகளுக்கு தடுப்பூசி மருந்துகளை வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, கனடா, மங்கோலியா மற்றும் பிற நாடுகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து ஏற்றுமதி செய்யவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!