Begin typing your search above and press return to search.
கலிபோர்னியாவில் மகாத்மா காந்தி சிலை சேதம்
மகாத்மா காந்தி நினைவு நாளான இன்று (ஜன.30) அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவிலுள்ள டாவிஸ் பகுதியில் அமைந்துள்ள சென்ட்ரல் பூங்காவில் மகாத்மா காந்தி சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் காந்தி சிலையின் முகம் மற்றும் கணுக்கால்களில் சேதங்களை ஏற்படுத்தியுள்ளனர். காந்தியின் நினைவு நாளான இன்று காந்தி சிலை சேதமடைந்து காணப்பட்டதால், அமெரிக்க வாழ் இந்தியர்கள் இந்த நிகழ்விற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.