ஏப்ரல் வரை முகக்கவசம் அவசியம்- ஜோபைடன்

ஏப்ரல் வரை முகக்கவசம் அவசியம்- ஜோபைடன்
X

அமெரிக்கர்கள் அனைவரும் அடுத்த நூறு நாட்களுக்கு முகக்கவசம் அணிய வேண்டும் என அந்நாட்டின் புதிய ஜனாதிபதியான ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து ஜோபைடன் மேலும் தெரிவிக்கையில், வரும் ஏப்ரல் மாதம் வரை முகக் கவசம் அணிவதனால் சுமார் 50 ஆயிரம் உயிர்களை காக்க முடியும் என்றும் இரண்டாம் உலகப் போரை விட அதிகமான மனித உயிர்கள் கொரோனாத் தொற்றினால் பறிபோனதாகவும் தெரிவித்திருந்தார். முன்னதாக கொரோனா பரவலைத் தடுப்பதற்கு மக்கள் பாதுகாப்புடன் முகக்கவசம் அணியும்படியும் அவர் தமது தேர்தல் பிரசாரத்தின் போதே வலியுறுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!