அமெரிக்க பாதுகாப்பு வீரர்களை கண்காணிக்க உத்தரவு
அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடன், பாதுகாப்புப் படை வீரர்களால் தாக்கப்படலாம் என தகவல் பரவியுள்ள நிலையில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளோரை, அந்த நாட்டின் உளவு அமைப்பான, எப்.பி.ஐ., கண்காணித்து வருகிறது.
அமெரிக்க அதிபராக, ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன், நாளை (20 ம் தேதி) பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த, டிரம்பின் ஆதரவாளர்கள் சிலரால், அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடன் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என தகவல் பரவியுள்ளது. அதனால், ராணுவ அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, ராணுவ அமைச்சர் ரயான் மெக்காத்தி, மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ள, 25 ஆயிரம் நேஷனல் கார்ட் எனப்படும் அதிரடிப் படையினர் குறித்த தகவல்களை ஆராய, எப்.பி.ஐ.,க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu