ஜோபைடன் அரசில் இந்தியர்களுக்கு முக்கிய பொறுப்பு

ஜோபைடன் அரசில் இந்தியர்களுக்கு முக்கிய பொறுப்பு
X

அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் தனது நிர்வாகத்தில் 13 பெண்கள் உள்பட 20 இந்திய-அமெரிக்கர்களை முக்கியப் பொறுப்புகளில் நியமனம் செய்துள்ளார்.

அமெரிக்காவின் 46-ஆவது அதிபராக ஜோ பைடன் வரும் 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்கிறார். இதுதவிர அதிபர் பதவியேற்புக்கு முன்னரே நிர்வாகத்தில் இந்திய - அமெரிக்கர்கள் பலர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் நீரா தாண்டன். இவர் வெள்ளை மாளிகை அலுவலகத்தின் நிர்வாகம் மற்றும் நிதிநிலை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க சர்ஜன் ஜெனரலாக டாக்டர் விவேக் மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். நீதித்துறை உதவி அட்டர்னி ஜெனரலாக வனிதா குப்தா, குடிமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம், மனித உரிமைகளுக்கான துணைச் செயலராக முன்னாள் வெளியுறவுத் துறை அதிகாரி உஸ்ரா ஷெயா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.பைடனின் நம்பிக்கைக்குரியவராக பல ஆண்டுகளாக அறியப்படும் வினய் ரெட்டி, கருத்து உருவாக்கும் குழுவின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.வேதாந்த் படேல், அதிபரின் உதவி ஊடகச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜோ பைடன் தனது தேர்தல் பிரசாரத்தின்போதே, தான் வெற்றி பெற்று அதிபரானால் தனது நிர்வாகத்தில் இந்திய-அமெரிக்கர்கள் பெருமளவில் இடம்பெறுவார்கள் எனக் கூறியிருந்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!