முள்ளிவாய்க்கால் நினைவிடத்துக்கு மீண்டும் அடிக்கல்

மாணவர்கள் மற்றும் இலங்கை அரசின் வேண்டுகோளை ஏற்று அடிக்கல் நாட்டப்பட்டது

இலங்கையில் இறுதிக்கட்ட போரில் இறந்த தமிழர்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் கட்டப்பட்டிருந்தது. சில நாட்களுக்கு முன்பு இது இடிக்கப்பட்டது. இலங்கை மட்டும் இன்றி பல நாடுகளில் இருந்தும் இதற்கு கடும் எதிர்ப்பும் கண்டனங்களும் இலங்கை அரசுக்கு குவிந்தது. தமிழ் நாட்டிலும் அரசியல் தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இலங்கையில் மாணவர்கள் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதனால் இவர்கள் கோரிக்கையை இலங்கை அரசு ஏற்றது. நினைவுத்தூண் பழைய அமைப்பிலேயே அரசின் அங்கீகாரத்துடன் கட்டி முடிக்கப்படும் என அறிவித்தது. இதனைத் தொடர்ந்து இலங்கை யாழ்ப்பாணம் பல்கலை துணைவேந்தரின் கோரிக்கையை ஏற்று மாணவர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டனர்.

யாழ்ப்பாணம் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் கட்ட மீண்டும் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. தமிழர்கள், மனித நேய சமூக ஆர்வலர்கள் பலருக்கும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தந்தது.

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!