அதிபர் பதவியேற்பில் பங்கேற்க மாட்டேன் : டிரம்ப்

அதிபர் பதவியேற்பில் பங்கேற்க மாட்டேன் : டிரம்ப்
X

அமெரிக்காவின் 46 - வது அதிபராக ஜோ பைடன் வரும் 20ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்க போவதில்லை என தெரிவித்துள்ளார்

அமெரிக்காவில் கடந்த ஆண்டு இறுதியில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த வெற்றியை டொனால்டு டிரம்ப் ஏற்க மறுத்து விட்டார். மற்றும் ஜோ பைடன் வெற்றிக்கு எதிராக டொனால்ட் ட்ரம்ப் தரப்பு பல்வேறு மாகாணங்களில் வழக்குகள் தொடர்ந்தார்கள். ஆனால் அந்த வழக்குகள் மாகாண நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்நிலையில் கடந்த 6-ம் தேதி தேர்தல் வெற்றி சான்றிதழை நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் பரிசீலனை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென டிரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு பெரும் வன்முறையில் ஈடுபட்டனர். பல மணி நேரம் கழித்து இந்த போராட்டம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. உலக நாடுகள் அனைத்தும் இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்திருந்தன. இந்நிலையில் டிரம்ப், என்னிடம் கேட்ட அனைவருக்கும், நான் ஜனவரி 20 அன்று பதவியேற்பு விழாவிற்கு செல்லமாட்டேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

Tags

Next Story
ai ethics in healthcare