அமெரிக்க அட்டர்னிஜெனரலாக இந்திய பெண் நியமனம்

அமெரிக்க அட்டர்னிஜெனரலாக இந்திய பெண் நியமனம்
X

விரைவில் அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடன், அமெரிக்காவின் இணை அட்டர்னி ஜெனரலாக அமெரிக்கவாழ் இந்தியரான வனிதா குப்தாவை நியமிக்கவுள்ளார்.

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன், அந்நாட்டின் இணை அட்டர்னி ஜெனரலாக அமெரிக்கவாழ் இந்தியரான வனிதா குப்தாவை தேர்வு செய்யவுள்ளார், நாட்டின் உயர்ந்த பதவிகளில் ஒன்றான இப்பதவியை அலங்கரிக்கும் முதல் பெண் இவராவார். முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் நிர்வாகத்தில், பைடன் துணை தலைவராக இருந்த போது வனிதாகுப்தா முதன்மை துணை உதவி அட்டர்னி ஜெனரலாகவும், நீதித்துறையில் சிவில் உரிமைகள் பிரிவின் தலைவராகவும் பணியாற்றினார் என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வனிதா இப்போது 200 க்கும் மேற்பட்ட மனித உரிமை அமைப்புகள் இணைந்து நடத்தும் சிவில் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான தலைமைத்துவ மாநாட்டின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!