துபாய் இலக்கிய திருவிழாவில் பங்கேற்கிறார் மலாலா

துபாய் இலக்கிய திருவிழாவில் பங்கேற்கிறார் மலாலா
X

துபாயில் நடைபெறும் இலக்கிய திருவிழாவில் நோபல் பரிசு பெற்ற மலாலா பங்கேற்று உரை நிகழ்த்துகிறார்.

உலக அளவில் பெண்கள் கல்வி மற்றும் முன்னேற்றத்திற்காக இளம் வயதில் போராட ஆரம்பித்தார் மலாலா. இதற்காக தன் பெயரில் ஒரு அறக்கட்டளை நிறுவினார்.மலாலா யூசப்சையிக்கு 2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. உலகிலேயே இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர் இவர் தான்.

இந்த ஆண்டு துபாய் நிறுவனமான எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் சார்பில், துபாய் கலாசாரம் மற்றும் கலை ஆணையத்தின் ஆதரவுடன் இலக்கிய திருவிழா நடத்தப்பட உள்ளது. வரும் ஜனவரி 29ஆம்தேதி ஜமீல்கலை மையத்தில் தொடங்கும் இந்த விழா பிப்ரவரி 13ஆம் தேதி நிறைவடைகிறது.இதில் உலக அளவில் பெண்களின் நிலை, அவர்களது முன்னேற்றம் மற்றும் கல்வி குறித்து சிறப்பு விருந்தினராக மலாலா கலந்துகொண்டு பேசுகிறார் என்று தகவல்கள் வெளியகியுள்ளன.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!