பெண் உரிமை ஆர்வலருக்கு ஐந்து ஆண்டு சிறை சவுதி நீதிமன்றம் தீர்ப்பு

பெண் உரிமை ஆர்வலருக்கு ஐந்து ஆண்டு சிறை சவுதி நீதிமன்றம் தீர்ப்பு
X

பெண்கள் உரிமை ஆர்வலர் லூஜெய்ன் அல்-ஹத்லூலுக்கு சவுதி பயங்கரவாத நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் மற்றும் எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சவுதிஅரேபியா வம்சாவளியை சேர்ந்த பெண் உரிமை ஆர்வலர் லூஜெய்ன் அல்-ஹத்லூல். இவர் மாற்றத்திற்காக கிளர்ச்சி செய்தல், வெளிநாட்டு நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றுவது மற்றும் பொது ஒழுங்கிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இணையத்தைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் அல்-ஹத்லூல் நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நிலையிலேயே இந்த தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அவருக்கு 30 நாட்கள் அவகாசம் உள்ளது. 31 வயதான அல்-ஹத்லூல் 2018 முதல் குறைந்தது ஒரு டஜன் பெண்களின் உரிமை ஆர்வலர்களுடன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!