உருமாறிய கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன ? இங்கிலாந்து சுகாதாரத்துறை அறிவிப்பு

உருமாறிய கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன ? இங்கிலாந்து சுகாதாரத்துறை அறிவிப்பு
X

உருமாறிய கொரோனா வைரசின் அறிகுறிகள் என்ன என்பது குறித்து இங்கிலாந்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கமான கொரோனா அறிகுறிகளோடு புதிய 7 அறிகுறிகள் இருக்கும் என இங்கிலாந்து நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இங்கிலாந்து நாட்டில் தற்போது பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸால் மறுபடியும் உலகம் மிரண்டு போயுள்ளது.கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறியும் அறிகுறிகளாக காய்ச்சல், வறட்டு இருமல், வாசனை மற்றும் சுவை இழத்தல் ஆகியவை கூறப்பட்டு வந்தன.

ஆனால் உருமாறிய கொரோனா வைரஸுக்கு மேலும் 7 அறிகுறிகள் தென்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.அதீத சோர்வு, தலைவலி, பசியின்மை, வயிற்றுப்போக்கு, மனக்குழப்பம், தசைவலி, தோல் அரிப்பு ஆகியவை இருந்தாலும் அது கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம் என்று இங்கிலாந்தின் சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

Tags

Next Story
கல்லீரல் பாதுகாக்க சில வழிகளை காணலாமா..? அப்போ இதோ உங்களுக்கான குறிப்பு..!