உக்ரைனில் பின்வாங்கும் ரஷ்ய படைகள்.... பதுங்கவா? பாயவா?

உக்ரைனில் பின்வாங்கும் ரஷ்ய படைகள்.... பதுங்கவா? பாயவா?
X

பெட்ரோல் குண்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள உக்ரைனியர்கள்.

அதிபர் உத்தரவால் ஆண்கள், பெண்கள் என அனைவரும் பெட்ரோல் குண்டு தயாரிக்கின்றனர்.

உக்ரெய்னின் 2வது பெரிய நகரான கார்கிவ் நகரை ரஷ்யர்களிடம் இருந்து மீட்டுவிட்டதாக உக்ரெய்ன் தெரிவித்துள்ளது. கடுமையாக நடந்த சண்டையில் 4 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரெய்ன் கூறுகிறது. ரஷ்யா இதுவரை வீரர்கள் இழப்பு விவரத்தை தெரிவிக்கவில்லை. நடுநிலை செய்திகள் என எதுவும் இதில் இல்லை. அதனால் தகவலை உறுதிப்படுத்த முடியாது. நகர்ப்புற போர் தான் இருப்பதிலேயே சிக்கலான போர். ஆப்கானிஸ்தான், ஈராக்கில் நகர்ப்புறத்தில் நடந்த சண்டைகளில் தான் ஏராளமான அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். டாங்கிகள் மேல் எங்கிருந்து வேண்டுமானாலும் மோல்டாவ் காக்டெய்ல் குண்டுகளை (பெட்ரோல் குண்டுகள்) வீசலாம். தெருவோரத்தில் நிறுத்தி இருக்கும் கார்களில் கார்க்குண்டுகள் வைக்கலாம்.

உக்ரெய்ன் அதிபர் மக்களை ஏராளமான மோலடோவ் காக்டெய்ல் குண்டுகளை தயாரிக்க சொல்லி வேண்டுகோள் விடுக்க, ஏராளமான உக்ரெய்ன் தாய்மார்களை பியர் பாட்டில், பெட்ரோலை வைத்து மோலடோவ் காக்டெய்ல் குண்டுகளை தயாரித்து வருகின்றனர். சகட்டுமேனிக்கு ஏவுகணைகள், விமானம் மூலம் குண்டுவீசினால் ஏராளமான உயிரிழப்புகள் நேரும். சோசியல் மீடியா உலகில் உடனடியாக அவை அனைத்தும் உலகெங்கும் போய் சேரும். இன்றைய நவீன உலகின் முதலாவது சோசியல் மீடியா போர் என உக்ரெய்ன் போரை சொல்லலாம். உக்ரெய்ன், ரஷ்யா இருதரப்பிடமும் ஏராளமான சோசியல் மீடியா கணக்குகள் உள்ளன. இதுவரை நடந்த போர்கள் எல்லாமே இப்படி சோசியல் மீடியா வலுவாக உள்ள நாடுகளிடையே நடந்ததில்லை.ரஷ்யா உத்தியை கொஞ்சம் மாற்றி உக்ரெய்னின் பெரிய பெட்ரோல் சேமிப்பு கிடங்கை தாக்கி அழித்துள்ளது. ரஷ்ய துருப்புகள் கீவை முற்றுகை இட்டுள்ளதாகவும், நகரை விட்டு வெளியேற முடியாது எனவும் நகர மேயர் கூறுகிறார். சோசியல் மீடியாவை பற்றி கவலைப்படாமல் உள்ளே புகுந்து அடித்தால் நகரை பிடிக்கலாம்...செய்வார்களா என தெரியவில்லை.

அணு ஆயுதத்தை பயன்படுத்துவேன் என புடின் எச்சரித்ததும் டென்மார்க், ஸ்வீடன், பின்லாந்து எல்லாம் ரஷ்யாவுக்கு எதிராக திரும்பியுள்ளன. தன் குடிமக்கள் உக்ரெய்ன் சென்று போரில் உக்ரெய்ன் சார்பாக கலந்துகொள்ளலாம் என டென்மார்க் கூறியுள்ளது. நேடோவில் சேரபோவதாக பின்லாந்து கூறுகிறது. இந்திய மாணவர்கள் பெருமளவில் கீவ், கார்கிவ் நகரில் உள்ளனர். கல்லூரி ஹாஸ்டல், பள்ளிகள், ரயில் நிலையங்களில் தங்கியுள்ளனர். உணவு பற்றாக்குறை உள்ளதாக தெரிகிறது. ஆனால் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை. ஆக இன்றைய நிலவரப்படி உக்ரைன் கை கொஞ்சம் ஓங்கியுள்ளதாக தெரிகிறது. ஆனால் ரஷ்யா ராஜதந்திர ரீதியில் பின்வாங்கி விரைவில் முற்றுகையை துவக்கலாம். இது நிஜமான பின்வாங்கலா, சைபிரிய புலியின் பாய்ச்சலுக்கான பின்வாங்கலா என்பது சில நாட்களில் தெரியும்.


Tags

Next Story