தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்? வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்? வானிலை மையம் தகவல்
X
தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று (வியாழக்கிழமை ) தமிழகத்தில் 17 மாவட்டங்களிலும், புதுவையில் ஒருசில இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யலாம்.

இன்று, சென்னை நகரை பொறுத்தவரையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil