இன்று உங்க ஏரியாவில் மழை பெய்யுமா? வானிலை அறிக்கை சொல்வது என்ன

இன்று உங்க ஏரியாவில் மழை பெய்யுமா?  வானிலை அறிக்கை சொல்வது என்ன
X

கோப்பு படம்

தமிழகத்தில் இன்று பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாகவே, தென் மாவட்டங்கள், வட மாவட்டங்கள் என்று தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. அவ்வகையில், இன்று எங்கெல்லாம் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, கரூர், திருச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 22 மாவட்டங்களில், ஒருசில இடங்களில் இடியுடன் கனமழையும், பிற மாவட்டங்களில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யலாம்.

சென்னை நகரில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். ஒருசில இடங்களில், இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம் என்று, சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கை தெரிவித்துள்ளது.

Tags

Next Story
50 வயசுக்கு மேல இருக்கவங்களா நீங்க..?உடனே இந்த தடுப்பூசிய போடுங்க..லேட் பண்ணிடாதீங்க !