வானிலை தகவல்

வானிலை தகவல்
X
மேற்குதொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் 28-ம் தேதி இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வட உள் கர்நாடகாவிலிருந்து தெற்கு உள் கர்நாடகா வழியாக தென் கேரளம் வரை நிலவும் (1.0 கிலோமீட்டர் உயரம்வரை) வளிமண்டல சுழற்சி காரணமாக 28-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

காற்றில் ஒப்பு ஈரப்பதம் (RH-Relative Humidity) 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதன் காரணமாக மாலை முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story