வெப்பத்தை தணித்த காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த திடீர் மழை

வெப்பத்தை தணித்த காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த திடீர் மழை
X

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று மாலை மழை பெய்தது.

காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதியில் இன்று பெய்த மழையினால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை வேளையில் திடீரென கன மழை பெய்ததால் கோடை வெப்பம் தணிந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் முடிவடைந்தாலும், கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இரண்டாவது கோடை காலம் தொடங்கி விட்டதோ என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் வெப்பம் காரணமாக பொதுமக்களும் வாகனம் ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகின்றனர்.கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்வேறு மாவட்டங்களில் வழக்கத்தை விட கூடுதலாக வெப்பம் நிலவும் எனவும் , பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.


காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில் மாலை நேரத்தில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, ஒலிமுகமது பேட்டை,தாமல், ஏனாத்தூர், வையாவூர், அய்யம்பேட்டை, வாலாஜாபாத், குருவிமலை, களக்காட்டூர் பரந்தூர், பாலு செட்டி சத்திரம், தாமல், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் திடீரென மழை பெய்தது.


மாலை வேளையில் மழை பெய்ததால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டாலும் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால் பொது மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது சம்பா பருவ அறுவடை தொடங்கி உள்ளதால் திடீர் மழை விவசாயிகளுக்கு சற்று சங்கடங்களை அளிக்கும் என்பதும், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல்லை மழை வரும் அறிகுறியை அடுத்து விவசாயிகள் விரைவாக சென்று அதை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
Spam Call வந்துட்டே இருக்கா.....?  அதுக்குதா ஒரு புதிய தொழில்நுட்பம் ஏர்டெல் நெட்வொர்க் கொண்டுவந்துருக்கா...?