தென்மேற்கு பருவமழை தொடங்கியது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு பருவமழை தொடங்கியது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
X
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தென்மேற்கு பருவமழை தென் வங்காள விரிகுடா, நிக்கோபார் தீவுகள், முழு தெற்கு அந்தமான் கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடலின் சில பகுதிகளில் மே 21 தொடங்கியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பருவமழை சாதாரணமாக தொடங்கும் நாளுக்கு ஒரு நாள் முன்னதாக மே 31 அன்று கேரளாவில் தொடங்கும் என்று கடந்த வாரம் கூறியிருந்தது. இது நான்கு மாத மழைக்காலத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது.

இந்த ஆண்டு பருவமழை சாதாரணமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கணித்துள்ளது

Tags

Next Story