திடீரென மழை.. காதைப் பிளக்கும் இடி.. கண்களை வெட்டும் மின்னல்! உங்க மாவட்டத்துலயும் மழைக்கு வாய்ப்பிருக்கா?

திடீரென மழை.. காதைப் பிளக்கும் இடி.. கண்களை வெட்டும் மின்னல்! உங்க மாவட்டத்துலயும் மழைக்கு வாய்ப்பிருக்கா?
X
தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாகவும் வெப்பச் சலனம் காரணமாகவும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழையோ, மிதமான மழையோ பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மழை மேகங்கள் தமிழகத்தின் மலைப்பகுதி மாவட்டங்களில் குளிர்காற்றுடன் லேசான மழையையும் தர வாய்ப்பு உருவாகியுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்திருக்கும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை, இடியுடன் கூடிய மழை, மிதமான மற்றும் லேசான மழைக்கு வாய்ப்பிருக்கிறது.

நாளைய தினம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 31ம் தேதி முதல் ஜூன் 2 வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

சென்னை மாநகர் மற்றும் புறநகரில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

லட்சத்தீவு பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் சமயங்களில் 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!