உஷாரய்யா உஷாரு... சென்னை உட்பட 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட்!

உஷாரய்யா உஷாரு... சென்னை உட்பட 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட்!
X
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட்!

கனமழை காரணமாக சென்னை உட்பட 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி கேட்டுக்கொள்ள பட்டிருக்கிறார்கள்.

சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள 9 மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மழை கொட்டித் தீர்த்து வருகின்றது. நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக சென்னையில் பல இடங்களில் மரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்து பல இடங்களில் மின்சாரம் தடைபட்டது. சாலைகளில் விழுந்த மரங்களை மாநகராட்சி பணியாளர்கள் அவ்வப்போது அப்புறப்படுத்தி, சுத்தமாக நீர் தேங்காதவாறு வேலை செய்து வருகின்றனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களிலும் கன மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பின் அடிப்படையில் இந்த விடுமுறை விடப்பட்டிருக்கிறது.

கிண்டி, வேளச்சேரி, வடபழனி, சைதாப்பேட்டை பகுதிகளில் தாழ்வான இடங்களில் அதிக அளவில் நீர் தேங்கியிருக்கிறது.

மீனம்பாக்கத்தில் 16 செமீ மழை பதிவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுவே சென்னையில் அதிகபட்சமாக பதிவாகியுள்ள மழை அளவாகும். தரமணி 12 செமீ, செம்பரம்பாக்கம் 11 செமீ, பூந்தமல்லி 7. 4 செமீ, நுங்கம்பாக்கம் 7 செமீ. என சென்னையின் முக்கிய நகரங்களில் மழை வெளுத்து வாங்கியிருக்கிறது.

வழக்கமான இயல்பை விட 3 மடங்கு அதிகமான மழை பெய்திருப்பதால், பொதுமக்கள் வெளியில் செல்லும் போது மிகுந்த கவனத்துடன் செல்லும்படி கேட்டுக்கொள்ளபட்டிருக்கிறார்கள். கடந்த 27 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் சென்னையில் ஜூன் மாதம் இப்படி மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.

Tags

Next Story
ai powered agriculture