தீவிரமடையும் மோக்கா புயல்! தமிழகத்துக்கு மழை வாய்ப்பு இருக்கிறதா?

தீவிரமடையும் மோக்கா புயல்! தமிழகத்துக்கு மழை வாய்ப்பு இருக்கிறதா?
X
தெற்கு அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள இந்த தாழ்வு நிலை, மேலும் வலுப்பெற்று வரும் 12ம் தேதி வங்கதேசம் மற்றும் மியான்மர் பகுதிகளுக்கு இடையே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருந்த நிலையில் அது புயலாக வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் உட்பட இந்தியாவின் எந்தெந்த மாநிலங்களுக்கு பாதிப்பு, மழைக்கு வாய்ப்பு, புயல் எங்கு கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள விவரங்களை இங்கு காண்போம்.

மோக்கா புயலின் காரணமாக நேரடியாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு குறைவு என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் மறைமுகமாக இந்த புயல் அதிக காற்றை இழுத்துச் செல்வதன் மூலம் வளிமண்டலத்தில் ஏற்படுத்தும் மாற்றம் மழைக்கு காரணமாக அமையலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தென் தமிழகத்தின் பல இடங்களில் இன்று முதல் மழைக்கு பெரிய வாய்ப்பு இருக்கிறது. அது அதீத வெப்பம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அமையலாம் என்றும் கூறுகிறார்கள்.

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் ஏப்ரல் மாத இறுதியில் மழைக்கு வாய்ப்பு உருவானது. மே மாதம் அக்னி நட்சத்திரம் உருவாகும் என்று கூறப்பட்ட நிலையில் மழைதான் பின்னி எடுத்தது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. வெப்பத்தின் காரணமாக கடுமையான பாதிப்புக்கு ஆளானவர்கள் பலரும் மழையால் மனம் குளிர்ந்தனர்.

இந்நிலையில் தென் கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருந்தது. அது இப்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது. இது சில மணி நேரங்களில் புயலாக உருவாவதற்கான அறிகுறியை ஏற்படுத்தும் எனவும் விரைவில் புயலாக மாறி வடக்கு திசை நோக்கி நகர்ந்து மத்திய வங்க கடல் மற்றும் அந்தமான கடல் பகுதியில் வலுப்பெறும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள இந்த தாழ்வு நிலை, மேலும் வலுப்பெற்று வரும் 12ம் தேதி வங்கதேசம் மற்றும் மியான்மர் பகுதிகளுக்கு இடையே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோக்கா புயலின் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு குறைவுதான் என்று கூறப்படுகிறது. புயலால் இல்லாவிட்டாலும் வெப்பச்சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story