அடுத்த 5 நாட்களுக்கு.... இந்திய வானிலை ஆய்வு மையம் கொடுத்த அதிரடி அறிவிப்பு!

அடுத்த 5 நாட்களுக்கு.... இந்திய வானிலை ஆய்வு மையம் கொடுத்த அதிரடி அறிவிப்பு!
X
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வழக்கமாக ஜூன் மாத துவக்கத்திலேயே வெயில் குறைந்து கொஞ்சம் கொஞ்சமாக மழைக்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். ஆனால் இம்முறை தமிழகத்தில் ஜூன் மாதம் துவங்கியும் வெயில் கொளுத்தியது. ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவ காற்று வீசும் என கூறப்பட்டது. ஆனால் அப்போதும் வெயில் சுட்டெரித்தது. அடுத்து ஜூன் 2வது வாரத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து தென் மேற்கு பருவ மழை ஆரம்பிக்கும் என்றார்கள். அப்போது இன்னமும் அதிகமாக வெயில் வாட்டி எடுத்தது. கடைசியாக ஜூன் மாதம் 3வது வாரமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் வெயில் குறைந்து, லேசான, மிதமான மழை பெய்ய ஆரம்பித்தது.

சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை லேசான மழையும், இரவு ஆரம்பிக்க கனமழையும் வெளுத்து வாங்கியுள்ளது. மின்னல்களும் வெட்டி வெளியில் செல்லவே மக்களை பயமுறுத்தி வருகின்றன. திடீர் வானிலை மாற்றம் காரணமாக பொதுமக்கள் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பலரும் கோரியுள்ளனர்.

கடும் வெயில் காரணமாக முதலில் ஜூன் 1ம் தேதி பள்ளி திறக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்போது பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டது. பின் மேலும் ஒரு வாரம் தள்ளிவைக்கப்பட்டு ஜூன் 12, 14ம் தேதிகளில்தான் பள்ளி திறக்கப்பட்டது. இப்படி வெயில் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட இதே ஜூன் மாதத்தில் கனமழை காரணமாகவும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ள படி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் அடுத்த 5 நாட்களுக்கு மிகப் பெரிய அளவில் மழை இருக்கும்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!