கர்நாடகாவிலும் பல மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்: மாறியது சீதோஷ்ண நிலை
தமிழகத்தை போலவே கர்நாடக மாநிலத்திலும் வெயில் கொளுத்தி வருகிறது. அங்கு 13 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி அடித்துள்ளது.
இந்தியாவின் சுவிட்சர்லாந்து என அழைக்கப்படுவது கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூரு நகரம். அங்கு மிகவும் குளிராகவும் அல்லாமல் கடும் வெயிலாகவும் அல்லாமல் இதமான சீதோஷ்ண நிலை நிலவுவதால் தான் அதற்கு சுவிட்சர்லாந்து என பெயர் வந்தது. இதன் காரணமாகவே அங்கு ஐ. டி. கம்பெனிகள் உள்ளிட்ட பன்னாட்டு கம்பெனிகளும் அதிகம் வரத் தொடங்கின. கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு தவிர மற்ற மாவட்டங்களில் வெயில் அவ்வப்போது அதிகமாக தலை காட்டினாலும் பெங்களூரு நகரம் மட்டும் எப்போதுமே அதிக அளவில் வெயில் தாக்கத்திற்கு ஆளாகாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் குறிப்பாக அக்னி நட்சத்திரம் மிக கொடுமையாக இருப்பதால் கடந்த வாரம் 20 மாவட்டங்களில் நூறு டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. இதனால் மக்கள் வெளியில் நடமாட முடியாமல் கடும் அவதிப்பட்டார்கள். இன்னும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு தவிர பெங்களூரு புறநகர் மற்றும் மாவட்டத்தின் 13 இடங்களில் நேற்று வெயில் 100 டிகிரியை தாண்டி உள்ளது.
கர்நாடக மாநிலத்தின் பல காவி, பீதர், விஜயா புரா, பாகல் கோட்டை, தார்வார், கதக் களத்து பெங்களூரு புறநகர் பல்லாரி சிக்மகளூர் சித்ரா துர்கா தாவணி கரை ஆகிய இடங்களில் நேற்று 100 டிகிரிக்கு மேல் அடித்த வெயில் 17 டிகிரி வரை பதிவாகியுள்ளது இதன் காரணமாக அம் மாநில மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள் கர்நாடக மாநிலத்தில் சீதோசன நிலை மாறி வெயில் தாக்கம் அதிகரித்து இருப்பது நம் மாநில மக்களை மிகவும் பாதிப்படைய செய்துள்ளது..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu