பாடாய் படுத்தும் வெயில் தொடருமாம்! குண்டைத் தூக்கிப் போட்ட வானிலை !
Weather News in Tamil
Weather News in Tamil-தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று 104 முதல் 108 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் வெப்பநிலை உயர்ந்து காணப்படக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பருவமழை தாமதமாகிக் கொண்டிருப்பதால் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் இது மேலும் 3 நாளைக்கு தொடரும் என தகவல் வெளியாகியுள்ளது அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கிறது.
சென்னை, சேலம், திருநெல்வேலி, மதுரை, திருச்சி என தமிழகத்தின் பெருநகரங்கள், மாநகரங்கள், நகரங்கள் என ஒன்றையும் விட்டு வைக்காமல் வெயில் கொளுத்தி எடுக்கிறது. மக்களுக்கு உடலில் வேர்க்குரு, கொப்பளங்கள் உண்டாகி படாத பாடு படுகின்றனர். மின்விசிறியிலிருந்து அனல் காற்று வீசுவதால் செய்வதறியாது மக்கள் தவித்து வருகின்றனர்.
வெப்ப அலை வீட்டுக்குள்ளேயே தங்கி இரவு தாண்டி அதிகாலை வரை உஷ்ணத்துடனேயே பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது. மக்கள் தண்ணீரை கொதிக்க வைக்காமலே அதிகாலை வரை பருகி வருகின்றனர். வெயிலின் தாக்கம் ஜூன் மாதம் குறைந்து விடும் என்று நம்பிக்கையிலிருந்தவர்களுக்கு பேரதிர்ச்சியாக 5 நாட்களைக் கடந்தும் வெயில் சுட்டெரிக்கிறது. இன்னும் 3 நாளைக்கு இந்த வெப்ப அலை ஓயாது என்றிருக்கிறார்கள். இருப்பினும் கேரள பகுதிகளை ஒட்டிய மாவட்டங்களிலுள்ள ஊர்களுக்கு கொஞ்சம் கொஞ்சம் மழையும், காற்றும் கிடைக்குமாம்.
வெப்பச்சலனம் காரணமாக சில இடங்களில் மழைக்கு வாய்ப்பிருக்கிறது. லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 3 நாட்களுக்குப்பிறகு வெப்பம் தணிந்து மழை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu