15 மாவட்டங்களில் இன்று கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

15 மாவட்டங்களில் இன்று கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
X

பைல் படம்.

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக, இன்று (02.04.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை (03.04.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

04.04.2023 மற்றும் 05.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

06.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

வேடசந்தூர் (திண்டுக்கல்), பாலக்கோடு (தருமபுரி), புகையிலை ஆராய்ச்சி மையம், வேடசந்தூர் (திண்டுக்கல்) தலா 12, காமாட்சிபுரம் (திண்டுக்கல்) 10, பாப்பாரப்பட்டி Agro (தருமபுரி), தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி) தலா 9, மாயனூர் (கரூர்), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி) தலா 6, பாப்பிரெட்டிப்பட்டி (தருமபுரி) 5, நட்ராம்பள்ளி (திருப்பத்தூர்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), ராஜபாளையம் (விருதுநகர்) தலா 4, கிருஷ்ணராயபுரம் (கரூர்), மாரண்டஹள்ளி (தருமபுரி), அவலூர்பேட்டை (விழுப்புரம்), பெனுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி), கீழ்பாடி (கள்ளக்குறிச்சி), மாஞ்சோலை (திருநெல்வேலி), மேல் அணை (திருப்பூர்) தலா 3, செய்யார் (திருவண்ணாமலை), காரைக்கால், மேல் பவானி (நீலகிரி), கெத்தண்டப்பட்டி (திருப்பத்தூர்), சுருளக்கோடு (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), வாணியம்பாடி (திருப்பத்தூர்), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), அன்னூர் (கோவை), கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), உதகமண்டலம் (நீலகிரி), எறையூர் (பெரம்பலூர்), தருமபுரி, விருதுநகர், திருப்பூர் தலா 2, சேத்பேட்டை (திருவண்ணாமலை), மஞ்சளாறு (தேனி), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), சூளகிரி கிருஷ்ணகிரி), ஹரூர் (தருமபுரி), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), சிற்றாறு (கன்னியாகுமரி), முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), பென்னாகரம் (தருமபுரி), ஆலங்காயம் (திருப்பத்தூர்), பெரியார் (தேனி), மணிமுத்தாறு (திருநெல்வேலி), வத்திராயிருப்பு (விருதுநகர்) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.

Tags

Next Story