பெங்களூருவில் பெய்தது ஆலங்கட்டி மழை: சூறைக்காற்றினால் மரங்கள் சாய்ந்தன
பெங்களூரு நகரில் ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சூறைக்காற்றுடன் பெய்த மழையால் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் கொளுத்துகிறது. எனினும் அவ்வப்போது சாரல் மலையும் பெய்து வருகிறது இந்நிலையில் நேற்று காலை நேரத்தில் பெங்களூரு, மைசூர் உள்ளிட்ட இடங்களில் வெப்பம் அதிகமாக காணப்பட்டது. மாலையில் திடீரென பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் குறைந்தது குளிர்ச்சியான சூழல் உருவானது.
பெங்களூரு சாம்ராஜ் பேட்டை, பனசங்கரி, சாந்தி நகர், ஜே.பி. நகர், ராஜாஜி நகர், ஜெயநகர் சிட்டி, மார்க்கெட், உத்தரஹள்ளி ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. மழை பெய்த போது சூறாவளி காற்றும் வீசியதால் மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. அப்போது அந்த வழியாக வந்த இரண்டு கார்கள் மீது மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. இதில் காரின் மேல் பகுதி சேதம் அடைந்தது. எனினும் கார்களில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர்.
மேலும் அரேஹள்ளி பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. பெங்களூரு மாநகராட்சி அலுலவகம் அருகே சாலையில் சென்ற பி. எம். டி. சி. பஸ் மீது மரம் முடிந்து விழுந்தது. எனினும் பயணிகள் காயம் எதுவும் இன்றி உயிர் தப்பினார்கள் .தொடர் மழையால் தாழ்வான பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது. மழை காரணமாக சில சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக சென்ற ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.இதனால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.சூறைக்காற்றுடன் பெய்த மழையால் பெங்களூரு புறநகர் பகுதிகளின் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. கர்நாடக மாநிலத்தில் மேலும் ஐந்து நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu