காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது : அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டத்தில் இடியுடன் மழை

காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது : அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டத்தில் இடியுடன் மழை

பைல் படம்

தெற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது. அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாயப்பு உள்ளது.

தெற்கு வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ள நிலையில் தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுதினம் அதி கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும்சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, குமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், நாகப்பட்டினம், திருவாரூர், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கேர்டை, சிவகங்கை, , ராமநாதபுரம், உள்ளிட்ட 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Tags

Next Story