/* */

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளது.

HIGHLIGHTS

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம்
X

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது என்றும் இது ஓரிரு தினங்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும். இதன் காரணமாக, வருகிற 24ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்மேற்கு வங்க கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலின் மத்தியப் பகுதிகள் மீது நிலைகொண்டு இருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இப்போது தென்மேற்கு வங்க கடல் மற்றும் இந்திய பெருங்கடலின் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி நிலைகொண்டு உள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக இலங்கை கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக வரும் 25 ஆம் தேதி வரை தென் கடலோர தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.

21.12.2022 மற்றும் 22.12.2022: குமரிக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

23.12.2022: மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Updated On: 23 Dec 2022 5:52 AM GMT

Related News