வங்கக்கடலில் உருவானது "அசானி" புயல்

வங்கக்கடலில் உருவானது அசானி புயல்
X

அசானி புயல் உருவாகியுள்ளதை காட்டும் செயற்கைக்கோள் படம் 

தென்கிழக்கு வங்க‌க்கடல் பகுதியில் “அசானி புயல்” உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது மேலும் வலுவடைந்து இன்று புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

அதன் படி, தென்கிழக்கு வங்க‌க்கடல் பகுதியில் "அசானி புயல்" உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

16 கி.மீ வேகத்தில் நகரும் இந்த புயல், விசாகப்பட்டினத்தில் இருந்து 970 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளதாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக உருமாறி வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரை பகுதிகளில் மே10-ம் தேதி அசானி புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், ஒடிசா மற்றும் ஆந்திரா கரையோர பகுதி மக்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் முன்னெச்சரிக்கையை தொடர்ந்து பேரிடர் மீட்பு மற்றும் தீயணைப்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாக இரு மாநில அரசுகள் தெரிவித்துள்ளது.

அசானி என்ற பெயர் இலங்கை அரசு பரிந்துரைத்த பெயராகும், சிங்கள வார்த்தையான இதற்கு "கடும்கோபம்" என்று அர்த்தம்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!