மாண்டஸ் புயல்: மூன்று மாவட்டங்களில் ரெட் அலெர்ட், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

மாண்டஸ் புயல்: மூன்று மாவட்டங்களில் ரெட் அலெர்ட், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
X

மாண்டஸ் புயலின் பாதை குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள படம் 

மாண்டஸ் புயல் காரணமாக இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான மாண்டஸ்' புயல் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை (சனிக்கிழமை) அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாண்டஸ் புயல் காரணமாக இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் புயல் வீசும் நாளில் (இன்று) இரவு பேருந்து சேவை அளிக்க நிறுத்தப்படும் என்றும் பேருந்து நிலையங்களில் கூட்டமாக மக்கள் நிற்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) 24 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருச்சி, திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், தி.மலை, தர்மபுரி, நாகை, சிவகங்கை, திருப்பத்தூர், ராமநாதபுரம், மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக தேனியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (09.12.2022) ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திண்டுக்கல், கொடைக்கானல் மற்றும் சிறுமலை ஆகிய மலைப்பகுதிகளில் உள்ள பள்ளி - கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புயல் மற்றும் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (09.12.22) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புயல் மற்றும் கனமழை காரணமாக கரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (09.12.22) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself