/* */

அரபிக்கடலில் உருவாகிய பிபர்ஜாய் புயல்: தமிழகத்தின் வானிலை நிலவரம்..

அரபிக்கடலில் உருவாகிய பிபர்ஜாய் புயலை அடுத்து தமிழகத்தின் வானிலை நிலவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

HIGHLIGHTS

அரபிக்கடலில் உருவாகிய பிபர்ஜாய் புயல்: தமிழகத்தின் வானிலை நிலவரம்..
X

வானிலை ஆய்வு மைய செயற்கைக்கோள் புகைப்படம்.

அரபிக்கடலில் உருவாகிய பிபர்ஜாய் புயலை அடுத்து தமிழகத்தின் வானிலை நிலவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுவையில் தென்மேற்கு பருவமழை பெரும்பாலான இடங்களில் பரவியுள்ளது. நேற்று (10.06.2023) மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய மிக தீவிர புயல் "பிபர்ஜாய்" வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, இன்று (11.06.2023) காலை 05:30 மணி அளவில் அதி தீவிர புயலாக வலுப்பெற்று, 08:30 மணி அளவில் அதே பகுதியில் மும்பையில் மேற்கே சுமார் 560 கிலோமீட்டர் தொலைவில், போர்பந்தரில் (குஜராத்) இருந்து தென்-தென்மேற்கே சுமார் 460 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இது மேலும் வலுப்பெற்று, 14.06.2023 காலை வரை வடக்கு திசையிலும், அதன் பிறகு, வடக்கு-வடகிழக்கு திசையிலும் நகர்ந்து சௌராஷ்டிரா- கட்ச் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை பகுதிகளில், 15.06.2023 அன்று 1130-1430 மணி அளவில் மிக தீவிர புயலாக, மாண்டிவி (குஜராத்) - மற்றும் கராச்சி (பாகிஸ்தான்) கடற்கரை பகுதிகளில் கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 125-135 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 150 கிலோ மீட்டர் வேகத்திலும் இருக்கக்கூடும்.

மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று (11.06.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

12.06.2023 முதல் 14.06.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

15.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை:

11.06.2023 & 12.06.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

11.06.2023 முதல் 14.06.2023 வரை: குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அந்தமான் கடல் பகுதிகள், மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

15.06.2023: மன்னார் வளைகுடா மற்றும் தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

இவ்வாறு அறிக்கையில் வானிலை மைய

Updated On: 11 Jun 2023 9:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  3. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  5. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  6. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி பாலக்கரையில் உள்ள சிவாஜி சிலை சங்கிலியாண்டபுரத்திற்கு
  8. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  9. க்ரைம்
    கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் அன்பில் தர்மலிங்கத்தின் 105 வது பிறந்த நாள் விழா