/* */

13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
X

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வரைபடம்.

தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழகப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (08.10.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை (09.10.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

10.10.2023 மற்றும் 11.10.2023:தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 12.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

13.10.2023 மற்றும் 14.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஏழுமலை (மதுரை) 10, பரமக்குடி (ராமநாதபுரம்) 6, புகையிலை நிலையம் (திண்டுக்கல்), வேடசந்தூர் (திண்டுக்கல்), சூலகிரி (கிருஷ்ணகிரி), சின்னார் அணை (கிருஷ்ணகிரி), பேரையூர் (மதுரை), வாலாஜா (ராணிப்பேட்டை), அம்முண்டி (வேலூர்) தலா 5, ஆலந்தூர் (சென்னை), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), குடிமியான்மலை (புதுக்கோட்டை), பொன்னமராவதி (புதுக்கோட்டை), அம்மூர் (வாலாஜா இரயில்வே) (ராணிப்பேட்டை) தலா 4, அம்பத்தூர் (சென்னை), வளசரவாக்கம் (சென்னை), தர்மபுரி, வி.களத்தூர் (பெரம்பலூர்), ஆவடி (திருவள்ளூர்), விருதுநகர், வத்திராயிருப்பு (விருதுநகர்), விருதுநகர் AWS தலா 3, வளசரவாக்கம் (சென்னை), மதுரவாயல் (சென்னை), அடையார் (சென்னை), வேப்பூர் (கடலூர்), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), அரவக்குறிச்சி (கரூர்), கெலவரப்பள்ளி அணை (கிருஷ்ணகிரி), கல்லந்திரி (மதுரை), கல்லிக்குடி (மதுரை), திருமயம் (புதுக்கோட்டை), சிவகங்கை, ஆண்டிபட்டி (தேனி), சோழவரம் (திருவள்ளூர்), கொரட்டூர் (திருவள்ளூர்) தலா 2, அம்பத்தூர் (சென்னை), வானகரம் (சென்னை), கோடம்பாக்கம் (சென்னை), பெருங்குடி (சென்னை), தரமணி ARG (சென்னை), விருதாச்சலம் KVK AWS (கடலூர்), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்), செம்பரம்பாக்கம் ARG (காஞ்சிபுரம்), தல்லி (கிருஷ்ணகிரி), கமுதி (ராமநாதபுரம்), ராணிப்பேட்டை, மேட்டூர் (சேலம்), சிங்கம்புணரி (சிவகங்கை), திருப்பத்தூர் (சிவகங்கை), வைகை அணை (தேனி) தலா 1.

Updated On: 9 Oct 2023 5:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  7. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  8. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  9. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!
  10. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...