நெல்லை உள்பட 8 மாவட்டங்களில் மீண்டும் கன மழை பெய்ய வாய்ப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரம் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், "இன்று இரவு 9.45 மணிக்குள் சென்னை, திருவள்ளூர், பெரம்பலூர், சேலம், திருச்சி, சிவகங்கை, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. " என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், "கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 25.12.2023 முதல் 27.12.2023 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
28.12.2023: தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 29.12.2023 முதல் 31.12.2023 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): அண்ணாமலை நகர் (கடலூர்) 3, மரக்காணம் (விழுப்புரம்), மதுராந்தகம் தாலுகா அலுவலகம் (செங்கல்பட்டு), சிதம்பரம் (கடலூர்), கொள்ளிடம் (மயிலாடுதுறை) தலா 2, மயிலாடுதுறை (மயிலாடுதுறை), நாலுமுக்கு (திருநெல்வேலி), பரங்கிப்பேட்டை (கடலூர்), செய்யூர் (செங்கல்பட்டு), ஜெயம்கொண்டம் (அரியலூர்), லால்பேட்டை (கடலூர்), ஊத்து (திருநெல்வேலி) தலா 1.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu