மீண்டும் ரயில் விபத்து 13 பேர் உயிரிழப்பு, 40 பேர் காயம்
ஆந்திராவில் நேற்று மாலை ஹவுரா-சென்னை வழித்தடத்தில் பயணிகள் ரயில் சிக்னலை மீறி பின்னால் இருந்து மற்றொரு ரயில் மீது மோதியதில் 13 பேர் இறந்தனர் மற்றும் 40 பேர் காயமடைந்தனர்.
விசாகப்பட்டினம் மற்றும் பலாசா இடையே ஒரு சிறப்பு பயணிகள் ரயில் .சிக்னல் இல்லாததால் அலமண்டா பிரதான பாதையில் வேகத்தில் சென்றபோது, விசாகப்பட்டினம்-ராயகடா ரயில் பின்னால் இருந்து மோதியது.
விசாகப்பட்டினம்-பலாசா ரயிலின் கடைசி மூன்று பெட்டிகளும், விசாகப்பட்டினம்-ராயகடா பயணிகள் ரயிலின் இன்ஜினும் இரண்டு பெட்டிகளும் தடம் புரண்டது
ஒரு பெட்டி தடம் புரண்டு ஒருபுறம் இருந்த சரக்கு ரயில் வேகன் மீது சாய்ந்தது
நேற்றிரவு ஒன்பதில் இருந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.40 பேர் காயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சமும் , பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சமும், சிறிய காயம் அடைந்த பயணிகளுக்கு ரூ. 50,000ம் வழங்கப்படும். என முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும் என ரயில்வே அமைச்சர் அறிவித்தார்
டெல்லி ரயில்வே அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை நிலைமையை கண்காணித்து வருவதாக ரயில்வே வட்டாரம் தெரிவித்துள்ளது.
கிழக்கு கடற்கரை ரயில்வே உதவி எண்களை வெளியிட்டுள்ளது (புவனேஸ்வர் - 0674-2301625, 2301525, 2303069, மற்றும் வால்டேர் - 0891-2885914.)