பறவைகளைப் போல் பறக்கும் அனுபவத்தை அளிக்கும் இந்த ஸ்கை டைவிங்
மைசூர், கர்நாடகா
சாமுண்டி மலைகளுக்கு நடுவே அமைந்துள்ளது 8 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். ஒரு நபருக்கு 2,50,00 ரூபாய் ஆகிறது.
ஹைதராபாத், தெலுங்கானா
நாகர்ஜுனா சாகர் விமானநிலையத்தில்தான் இந்த ஸ்கை டைவிங் பகுதி இருக்கிறது.மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கப்படும்.9000 முதல் 10,000 அடி உயரத்திலிருந்து பறக்கலாம். ஒரு நபருக்கு 19,500 ரூபாய் ஆகிறது.
அலிகார், உத்திரப்பிரதேசம்
ஸ்கை டைவிங் விளையாட்டில் மறக்க முடியாத த்ரில்லிங் அனுபவத்தை பெற அலிகார் சிறந்த இடம் இங்கும் 9000 முதல் 10000 அடி உயரத்திலிருந்து பறக்கும் அனுபவத்தைப் பெறலாம்
தீசா, குஜராத்
ஸ்கை டைவிங் செய்யப்போகும் ஒரு மணி நேரத்திற்கு முன் அது குறித்த பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. 3,500 முதல் 4000 அடி உயரம். 16000 தொடங்கி 38000 ரூபாய் வரை செலவாகும்
ஆம்பி பள்ளத்தாக்கு, மஹாராஷ்ட்ரா
உறுப்பினர் அட்டைகள் வழங்கி ஒரு வருடத்திற்கான சளுகைகளும் அளிக்கின்றனர். 10,000 அடி உயரத்தில் நின்றபடி பாராசூட்டிலிலிருந்து பறக்க விடுவதுதான் இவர்களின் சிறப்பு.20,000 - 25,000 வசூலிக்கப்படுகிறது.
தானா, மத்தியப்பிரதேசம்
சாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்தான் தானா. பயிற்சியாளார் உங்களுடன் துணைக்கு வருவார்.ஸ்கை டைவிங் செய்ய 35000 முதல் 37000 வரை செலவாகிறது.
புதுச்சேரி:தமிழ்நாடு
பாண்டிச்சேரி சென்றால் காற்றில் பறக்கும் காற்றாடியாய் அலைமோதும் அனுபவத்தைப் பெறலாம். இங்கு 18,000 முதல் 62,000 வசூலிக்கப்படுகிறது.
நர்வால் - ஹரியானா
ஹரியானா நன்னாலில் அமைந்துள்ள பச்சோத் ஏர்ஸ்டிப்பில் ஒரு பரவசமான ஸ்கை டைவிங் அனுபவத்தையும் வழங்குகிறது. இங்கு 18,000 முதல் 27500 வசூலிக்கப்படுகிறது.
பிர் பில்லிங் - இமாச்சல பிரதேசம்
இமாச்சல பிரதேசத்தின் ஜோகிந்தர் நகர் பள்ளத்தாக்கின் மேற்கில் அமைந்துள்ள பிர் பில்லிங்.4300 முதல் 8,000 அடி உயரத்திலிருந்து பறக்கலாம். 6500 முதல் 8000 வசூலிக்கப்படுகிறது.
பறவைகளைப் போல் பறக்கும் அனுபவத்தை அளிக்கும் இந்த ஸ்கை டைவிங்