திருச்செங்செங்கோட்டில் 22ம் தேதி மாவட்ட அளவிலான செஸ் போட்டி
திருச்செங்கோடு ஜே.பி ஆனந்த் செஸ் அகாடமி நடத்தும் 3-வது மாவட்ட அளவிலான செஸ் போட்டி, நடைபெறுகிறது.
இப்போட்டியில் நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த வீரர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.
போட்டிக்கு முதன்மை நடுவராக நாமக்கல்லை சேர்ந்த பீடே செஸ் போட்டி நடுவர் முத்துகுமாரசாமி பணியாற்றுவார்.
போட்டிகள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடைபெறும்.
சீனியர் பிரிவில் வெற்றிபெறும் வீரருக்கு முதல் பரிசாக ரூ.1,500 மற்றும் கோப்பையும் வழங்கப்படும்.
2ம் பரிசாக ரூ.1000, 3ம் பரிசாக ரூ.800, 4ம் பரிசாக ரூ.700, 5ம் பரிசாக ரூ. 600 என மொத்தம் 15 ரொக்க பரிசுகள் வழங்கப்படும்.
8 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்- சிறுமியர் பிரிவில் வெற்றிபெறும் முதல் 3 வீரர்களுக்கு தலா 3 கோப்பைகள்.
மொத்தம் 42 கோப்பைகளும் மற்றும் பங்குபெறும் 7 வயதுக்குட்பட்ட அனைத்து வீரர்களுக்கும் பதக்கங்கள் வழங்கப்படும்.
போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் வருகின்ற 20ம் தேதிக்குள் நுழைவுக்கட்டணமாக ரூபாய் 250 - ஐ செலுத்தி தங்களுடைய பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.