தற்போது, ஆச்சரியமான ஒரு புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஹவ்ராவிலிருந்து தாரகேஸ்வர் லோக்கல் ரயிலில், ரயில் பெட்டிக்குள் பயணிகளுக்கு மத்தியில், காய்கறிகள் விற்பனை நடக்கிறது.
ஓடும் ரயிலில், பயணிகளுக்கு மத்தியில், காய்கறி விற்பனை நடப்பது வித்யாசமாக, ஆச்சரியமாக உள்ளது.
ஆனால், ரோட்டோர பிளாட்பாரத்தை போல, ஓடும் ரயிலில் கோணிப்பை விரிப்புகளில் காய்கறிகளை பரப்பி வைத்து விற்கப்படுவது, பயண நேரத்திலேயே, மக்கள் காய்கறி 'பர்சேஸ்' ஐ முடித்துக்கொள்ள அருமையான வாய்ப்பாக உள்ளது.