10 ஆண்டு காதல்.. மனம் திறந்த அசோக் செல்வன்-கீர்த்தி தம்பதி!
இருவரும் 10 வருட காதல் கதையை சமீபத்திய பேட்டி ஒன்றில் முதன்முறையாக பகிர்ந்துகொண்டனர்.
இருவரும் காதலித்து கடந்த செப்டம்பர் 13 தேதி திருமணம் செய்துகொண்டனர்.
அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியனின் காதல், சமீபத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ப்ளூ ஸ்டார் படத்தில் தான் மலர்ந்தது என அனைவரும் நினைத்திருந்தனர்.
2013-ம் ஆண்டு கீர்த்தி பாண்டியன் தன்னுடைய நண்பர்களுக்கு தீபாவளி பார்ட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார். இருவரும் முதன்முதலில் சந்தித்துள்ளனர்
அப்போது கீர்த்திக்கும் பிடித்துப்போக இருவரும் டேட்டிங் செய்ய தொடங்கி இருக்கின்றனர்.
பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸாக கீர்த்தியை அந்தமான் அழைத்து சென்ற அசோக் செல்வன், அங்கு அவருக்கு பிடித்த விஷயங்களையெல்லாம் முன்கூட்டியே ஏற்பாடு செய்துவைத்து இருந்தாராம்.
பிறந்தநாளுக்கு இதைவிட சிறந்த பரிசு என்ன இருக்க முடியும் என பூரித்துபோன கீர்த்தி தன் தந்தையிடம் பேசுமாரு அசோக் செல்வனை அழைத்து சென்றிருக்கிறார்.
அருண் பாண்டியனும் முழு மனதோடு சம்மதம் தெரிவித்த பின்னர் தங்களது காதல் திருமணம் கோலாகலமாக நடந்ததாக அசோக் செல்வனும் கீர்த்தி பாண்டியனும் அந்த பேட்டியில் கூறி இருந்தனர்.