பிக் பாஸ் சீசன் 6ல இந்த புதுமண ஜோடியு போறாங்களா?

இவர்களது திருமணத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்தாலும், சிலர் மிகவும் தவறாக பேசினார்கள். இதனால் ரவீந்தர் மீது சமூக வலைதளங்களில் பல சர்ச்சைகள் எழுந்தன. அந்த சர்ச்சைகளுக்கெல்லாம் ரவீந்தர் சரியான பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் திருமணமாகி இரண்டு மாதங்களுக்குள் ஜோடியாக பிக் பாஸ் 6ல் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கிட்டத்தட்ட உறுதியான தகவல் என்று பேசபடுகிறது.
இந்த செய்தி பல ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 'இப்போ அவங்க கல்யாணத்தைப் பிரிக்கப் போறீங்களா' என்று தவறாகப் பேசுகிறார்கள். இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.