சனி பகவானின் ஆட்டம் தீபாவளி முடித்தவுடன் இந்த 5 ராசிக்காரர்களை பாதிக்கும்

அக்டோபர் 23, தீபாவளிக்கு ஒரு நாள் முன்னதாக சனி பகவானின் மாற்றம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சாதகமற்ற பலன்களைத் தரும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல சிரமங்களைக் கொண்டுவரப் போகிறது. இந்த நேரத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் நீங்கள் பெறாமல் போகலாம். இந்த காலகட்டத்தில் உங்கள் வேலையில் சில தடைகள் ஏற்படக்கூடும். இது மட்டுமல்ல, இந்த நேரத்தில் உங்கள் செலவுகள் அதிகமாக இருக்கும், அதே சமயம் லாபம் குறைவாக இருக்கும். குடும்ப பிரச்சனைகள் மற்றும் நிதி சிக்கல்களால் கவலை ஏற்பட வாய்ப்புள்ளது.
கடக ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில், வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் வருமானம் குறைவாகவும், செலவுகள் அதிகமாகவும் இருக்கும். மேலும், திருமண வாழ்வில் சில ஏற்ற தாழ்வுகள் ஏற்படும். சனியின் மாற்றம் காரணமாக நீங்கள் பண இழப்புகளையும் சந்திக்க நேரிடலாம்.
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில், நீங்கள் திட்டமிட்டிருந்த பணிகளில் சனி தடைகளை உருவாக்குவார். இதுமட்டுமின்றி, இந்த நேரத்தில் உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பல விதங்களில் இடையூறுகளும் தடைகளும் வரக்கூடும். உடல்நலம் விஷயத்தில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் உடல்நலம் மோசமாக பாதிக்கப்படும். இந்த நேரத்தில் உங்கள் செலவுகளையும் கட்டுப்படுத்த முயற்சி செய்வது நல்லது.
மகர ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் உங்கள் மனக் கவலைகள் அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக பிரச்சனைகள் வரும். இதனுடன் உங்கள் செலவுகளும் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் குழப்பம் அதிகரிக்கும். உங்கள் உடன்பிறந்தவர்களின் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
கும்ப ராசிக்காரர்களுக்கு அலைச்சல் அதிகமாகும். இந்த நேரத்தில் உங்கள் பணச் செலவு அதிகமாக இருக்கும். மேலும், இந்த நேரத்தில் ஆரோக்கியத்தில் சற்று அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கும், அலட்சியமாக இருக்க வேண்டாம். இந்த காலகட்டத்தில் நீங்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்கான யோகம் உண்டாகும். ஆனால், இந்த பயணத்தால் அதிக பணம் செலவாகும்.