என்னது இந்த கண்டெஸ்டண்ட் ஷூ-ல ப்ளூடூத் வச்சிருந்தாங்களா!
பிக் பாஸ் ஷோ என்றாலே போட்டியாளர்கள் 100 நாட்களுக்கு வெளியுலக தொடர்பு இல்லாமல் வீட்டுக்குள் இருக்க வேண்டும். கிட்டத்தட்ட ஜெயில் போல தான் இந்த விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது.
ஷோவின் இறுதிக்கட்டத்தில் மட்டுமே போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டுக்குள் விருந்தினர்களாக வருவார்கள். அது வரை வெளியில் என்ன நடக்கிறது என்பது போட்டியாளர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.
இந்நிலையில் தற்போது பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக இருக்கும் மணிகண்டன் அவரது ஷூவில் ப்ளூடூத் இருக்கிறது என சொன்னதால் அவர் மீது சந்தேகம் எழுந்திருக்கிறது.
அதை சோதிக்க பிக் பாஸ் டீம் எடுத்து சென்று இருக்கிறார்கள் என மைனா நந்தினி பேசி இருக்கும் வீடியோ தற்போது 24 மணி நேர ஒளிபரப்பில் வந்திருக்கிறது.