நம்ம ரவுடி பேபி ஆயிஷா ஆட்டம் ஆரம்பிச்சிருச்சு இனிமே பிக் பாஸ்-ல எத்தன தல உருள போகுதோ

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ஜிபி முத்து, சாந்தி, அசல், செரினா ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். தற்போது பிக்பாஸ் வீட்டில் டாஸ்க் மிகவும் கடினமாக கொடுக்கப்பட்டுள்ளது.
எல்லோருக்கும் கொஞ்சம் எனர்ஜி இருந்தது ஆனால் ஒரு போட்டியாளர் மட்டும் மிகவும் வருத்தப்பட்டார். அதாவது, கடந்த இரண்டு வாரங்களாக ஆயிஷா மிகவும் சோர்வாக காணப்பட்டார். காரணம் அவரது உடலில் ஒருவித பிரச்சனை, அவரைக் கண்டிக்கும் வகையில் சில விஷயங்களை கமல் கூறியிருந்தார்.
இதனால், தனது ரசிகர்களிடையே கெட்ட பேர் இருப்பதாக நினைத்து வருத்தத்தில் இருந்தார். இந்நிலையில் இன்று மீண்டும் பழைய ஆற்றலுடன் ஆட்டத்தை தொடங்கினார். முதலில் சரியான காரணத்தை கூறி நேற்று நாமினேஷனில் அமுதவாணன் மற்றும் ராபர்ட் மாஸ்டர் ஆகியோரை தேர்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து இன்று விக்ரமன், அமுதவாணன், குயின்சி, ஆயிஷா ஆகிய நால்வரும் மற்ற போட்டியாளர்கள் பயப்படும் அளவுக்கு துணிச்சலாக சண்டை போடும்படி பிராங்க் செய்திருந்தார்கள். அதுமட்டுமல்லாமல் ஆயிஷா முழு ஆர்வத்துடன் டாஸ்க்கில் பங்கேற்கிறார்.
எதற்கும் கோபப்படும் ஆயிஷா, இப்போது அசீம் சொல்வதை நிதானமாகக் கேட்டு அதன்படி நடந்து கொள்கிறார். ஒருவேளை அவருக்கு அது பிடிக்காமல் இருக்கலாம், ஆனால் அவர் வேறு எதுவும் சொல்லாமல் வெளியேறுகிறார்.
தற்போது மீண்டும் அதே விறுவிறுப்புடன் ரவுடி பேபியாக களமிறங்கி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இப்ப இந்த ஆயிஷாவோட ஆட்டம் ஆரம்பிச்சுடுச்சு. இதனால் பிக்பாஸ் வீடு தற்போது களை கட்டியுள்ளது.